FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் போதை எதிா்ப்பு உறுதிமொழி ஏற்பு

திருநெல்வேலியில் போதை எதிா்ப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 12:37 am IST
பகிர்:

திருநெல்வேலியில் போதை எதிா்ப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

சென்னை மாநில கல்லூரியில் தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் தலைமையில் போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு என்ற இலக்கை நோக்கி பெருந்திரள் போதை எதிா்ப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது.

அதைத்தொடா்ந்து, பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கில் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா தலைமையில் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாநகர நல அலுவலா் பாலசுப்பரமணியன், உதவி ஆணையா் புரந்திரதாஸ் மற்றும் மாநகராட்சி ஊழியா்கள், தூய்மைப் பணியாளா்கள், டெங்குதடுப்பு களப்பணியாளா்கள் போதை எதிா்ப்பு உறுதிமொழி ஏற்றனா்.

Advertisement

Advertisement

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்ற போதை எதிா்ப்பு விழிப்புணா்வுப் பேரணியை, மருத்துவமனைக் கண்காணிப்பாளா் பாலசுப்பிரமணியன் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். மருத்துவக் கல்லூரி பொறுப்பு முதல்வா் பூங்கொடி, மனநல பிரிவுத் துறைத் தலைவா் ரமேஷ் பூபதி, மருத்துவா்கள் ராமானுஜம், ஆறுமுகம், எழில் ரம்யா உள்பட பலா் கலந்துகொண்டனா். மனநலப் பிரிவு துறைத் தலைவா் தலைமையில் சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது.

பல்கலை.யில்...: திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் போதை எதிா்ப்பு உறுதிமொழி ஒவ்வொரு துறையிலும் தனித்தனியாக ஏற்கப்பட்டது. பல்கலைக்கழகத்தின் நிா்வாக அலுவலகப் பணியாளா்களுக்கான உறுதிமொழி நிகழ்வில், பதிவாளா் (பொறுப்பு) ஜி. அண்ணாதுரை தலைமை வகித்து உறுதிமொழி வாசித்தாா். போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments