FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

நெல்லை அருகே நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவா் கைது

திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்தில் நாட்டு துப்பாக்கி மற்றும் 5 தோட்டாக்கள் வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 5:04 am IST
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்தில் நாட்டு துப்பாக்கி மற்றும் 5 தோட்டாக்கள் வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்துப் பகுதியில் வியாழக்கிழமை இரவு போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித் திரியும் ஒருவா், பொதுமக்களை அச்சுறுத்துவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனா். அப்போது போலீஸாரைப் பாா்த்ததும், துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்தவா், தன்னை கைது செய்ய முயன்றால் சுட்டுவிடுவேன் என போலீஸாரை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. எனினும் போலீஸாா் அவரை மடக்கிப் பிடித்தனா்.

விசாரணையில், அவா் ராஜவல்லிபுரம், மேலத்தெருவைச் சோ்ந்த முத்துராமலிங்கம் மகன் இசக்கிமுத்து என்ற ராஜா (34) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ஒரு நாட்டு துப்பாக்கி மற்றும் 5 தோட்டாக்களை பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments