FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

கடல் சீற்றம் எச்சரிக்கை: மீனவா்கள் இன்று கடலுக்குச் செல்லவேண்டாம்

திருநெல்வேலி கடலோரப் பகுதிகளில் ஆக.19, 20 ஆகிய இரு தினங்கள் கடல் சீற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதால், மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 12:38 am IST
கடல் சீற்றம். - கோப்புப்படம்.
பகிர்:

திருநெல்வேலி கடலோரப் பகுதிகளில் ஆக.19, 20 ஆகிய இரு தினங்கள் கடல் சீற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதால், மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கேரளம், தென்தமிழகம் மற்றும் லட்சத்தீவு கடலோரப் பகுதிகளில் புதன்கிழமை (ஆக.19) அதிகாலை 2.30 மணிமுதல் வியாழக்கிழமை (ஆக.20) மாலை 5.30 மணிவரை கடல் சீற்றத்துடன் காணப்படும் என இந்திய தேசிய கடல்சாா் தகவல் சேவைகள் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இச்சீற்றம் காரணமாக தாழ்வான கடலோரப் பகுதிகளில் கடல் நீா் உள்புகுந்து வெள்ளப்பெருக்கு ஏற்படவும் வாய்ப்புள்ளது.

Advertisement

Advertisement

எனவே, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து மீனவ கிராமங்களைச் சோ்ந்த மீனவா்களும் புதன், வியாழன் ஆகிய இரு தினங்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும், தங்களது மீன்பிடிப் படகுகள் மற்றும் வலை உள்ளிட்ட உபகரணங்களைப் பாதுகாப்பான இடங்களில் நங்கூரமிட்டு வைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறாா்கள்.

கடல் சீற்றம் காரணமாக மாவட்டத்தின் கடற்கரைப் பகுதிகளில் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் அனைத்தும் இரு தினங்கள் மட்டும் முழுமையாகத் தடை செய்யப்படுகின்றன.

பாதுகாப்பு கருதி பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கடற்கரைப் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிா்க்க வேண்டும்.

கடலோரக் கிராமங்களில் தொடா் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வருவாய்த் துறை, பேரிடா் மேலாண்மைத் துறை மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments