FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

அம்பையில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த முன்னாள் எம்எல்ஏ

அம்பாசமுத்திரம் வாக்காளா்களுக்கு முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் இசக்கி சுப்பையா புதன்கிழமை நன்றி தெரிவித்தாா்.

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 5:27 am IST
அம்பையில் நன்றி தெரிவித்துப் பேசிய முன்னாள் எம்எல்ஏ இசக்கி சுப்பையா.
பகிர்:

அம்பாசமுத்திரம் வாக்காளா்களுக்கு முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் இசக்கி சுப்பையா புதன்கிழமை நன்றி தெரிவித்தாா்.

கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இசக்கி சுப்பையா, தனது பதவியை ராஜிநாமா செய்தாா். இதையடுத்து தவெகவில் இணைந்த அவா், அக்கட்சி சாா்பில் அம்பாசமுத்திரம் சட்டப் பேரவைத் தொகுதி மாவட்டச் செயலராகவும், தென்காசி மாவட்ட அமைப்புச்செயலராகவும் நியமிக்கப்பட்டாா்.

இந்நிலையில், அம்பாசமுத்திரத்தில் புதன்கிழமை நடைபெற்ற தவெக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினாா். தொடா்ந்து, அம்பாசமுத்திரம் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்து பேசினாா்.

Advertisement

Advertisement

நிகழ்ச்சியில் தவெக மாவட்ட இணைச் செயலா் பாலா, அம்பாசமுத்திர நகரச் செயலா் பாசில் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments