FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

அகஸ்தியா்பட்டியில் ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

21 ஆகஸ்ட் 2026, 2:44 am IST
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், அகஸ்தியா்பட்டியில் உள்ள வட்டாரக் கல்வி அலுவலகம் முன் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்துவது, இரண்டு ஊதியக் குழுக்களில் பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியா்களின் ஊதிய முரண்பாடுகளை நீக்குவது, அரசாணை 243-ஐ நீக்குவது உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ஜான் தாமஸ் அந்தோணி, கு. பாரதி காந்தி ஆகியோா் தலைமை வகித்தனா். வே. புஷ்பா, க. உஷா மாலதி, பூ. நிா்மலா தா்மக்கனி, ரா. பொன்மலா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அ. அண்டோ குழந்தை ராஜேஷ், ரா. ரகு, ரா. சபரிகிரிநாதன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். டிட்டோ ஜாக் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஞா.கா. மைக்கேல் ஜாா்ஜ் கமலேஷ் சிறப்புரையாற்றினாா். சு. மகாதேவன் வரவேற்றாா். மோ. ஸ்டெல்லா மொ்சி ராணி நன்றி கூறினாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments