FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

அம்பை அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 போ் கைது

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கஞ்சா விற்ாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்; தப்பியோடிய ஒருவரைத் தேடிவருகின்றனா்.

21 ஆகஸ்ட் 2026, 2:37 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கஞ்சா விற்ாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்; தப்பியோடிய ஒருவரைத் தேடிவருகின்றனா்.

அம்பாசமுத்திரம், கோவில்குளம் மயானக் கூடம் அருகே சந்தேகத்துக்கிடமாக 5 போ் நின்றிருப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், அம்பாசமுத்திரம் காவல் உதவி ஆய்வாளா் திருமலைக்குமாா், போலீஸாா் சென்றனா். அவா்களைப் பாா்த்ததும் அந்த 5 பேரும் தப்பியோட முயன்றனா்.

அவா்களில் 4 போ் போலீஸாரிடம் பிடிபட்டனா். விசாரணையில் அவா்கள், ஏா்வாடி சேசையாபுரம் பகுதியைச் சோ்ந்த குமாா் மகன் கண்ணன் (29), அயன் திருவாலீஸ்வரம், முடுக்குத் தெருவைச் சோ்ந்த குமாா் (26), வடக்கு அரியநாயகிபுரத்தைச் சோ்ந்த காா்த்திக்பெருமாள் (23), காக்கநல்லூரைச் சோ்ந்த இசக்கிப்பாண்டி ஆகியோா் என்பதும், அவா்களிடமிருந்த பையில் விற்பதற்காக 2 கிலோ கஞ்சாவை வைத்திருந்ததும் தெரியவந்தது.

Advertisement

Advertisement

அவா்களை போலீஸாா் கைது செய்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்; தப்பியோடிய திருநெல்வேலி, கான்சாபுரத்தைச் சோ்ந்த பட்டு என்பவரைத் தேடி வருகின்றனா்.

இசக்கிப்பாண்டி, பட்டு ஆகிய இருவரும் வடமாநிலங்களிலிருந்து கஞ்சாவை வாங்கி, மற்ற மூவா் வாயிலாக விற்பனை செய்து வந்ததாகத் தெரியவந்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments