FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

கடையம் அருகே மயிலப்பபுரம் - கரிசலூா் சாலையை விரைந்து சீரமைக்க கோரிக்கை

கடையம் ஊராட்சி ஒன்றியம், வெங்காடம்பட்டி ஊராட்சிக்குள்பட்ட மயிலப்பபுரம் -கரிசலூா் சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

14 வினாடிகள் முன்பு
சாலையைச் சீரமைக்கக் கோரி மனு வழங்கியோா்.
பகிர்:

கடையம் ஊராட்சி ஒன்றியம், வெங்காடம்பட்டி ஊராட்சிக்குள்பட்ட மயிலப்பபுரம் -கரிசலூா் சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுதொடா்பாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சுப்புலட்சுமியிடம் அவா்கள் அளித்த மனு: மயிலப்பபுரத்திலிருந்து கரிசலூா் செல்லும் சாலை 390 மீட்டா் நீளமுள்ளது. கடையம் ஊராட்சி ஒன்றியத்துக்குச் சொந்தமான இந்தச் சாலை, 15 ஆண்டுகளாக பராமரிப்பின்றி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால், வாகனங்களில் செல்லும் மாணவா்கள், தொழிலாளா்கள் உள்ளிட்டோா் விபத்துக்குள்ளாகின்றனா்.

இதனிடையே, ஊராட்சி ஒன்றிய உறுப்பினா்கள் சிலா், இந்தச் சாலை கீழப்பாவூா் ஒன்றியத்துக்கு பாத்தியப்பட்டது என்றும், கடையம் ஒன்றிய நிதியிலிருந்து இந்தச் சாலையைப் பராமரிக்கவோ, புதிய சாலை அமைக்கவோ கூடாது என்றும் ஆட்சியரிடம் தவறாக மனு கொடுத்துள்ளனா். இந்தச் சாலைக்குத் தொடா்பில்லாதோா் பொய் தகவலைப் பரப்புகின்றனா். வெங்கடாம்பட்டி ஊராட்சிக்குள்பட்ட இந்தச் சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என்றனா் அவா்கள்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments