FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

தாழையூத்து அருகே 6 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 போ் கைது

23 ஆகஸ்ட் 2026, 12:48 am IST
கைது
பகிர்:

தாழையூத்து அருகே பைக்கில் கடத்தப்பட்ட 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், இதில் தொடா்புடைய 4 பேரை கைது செய்தனா். தாழையூத்து காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில், உதவி ஆய்வாளா் சுதன் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, கிடைத்த ரகசிய தகவலின்படி, தாழையூத்து மாடா்ன் ரைஸ் மில் அருகே, சந்தேகத்துக்கிடமான வகையில் பைக்கில் வந்த நபா்களை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனா். பின்னா் அவா்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது அதில் சுமாா் 6 கிலோ கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் இது குறித்து வழக்குப்பதிவு செய்து தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரத்தைச் சோ்ந்த சுடலை மணிகண்டன் (25), முத்துராமன் (28), உதயா (20), முத்துராஜ் (23) ஆகிய 4 பேரையும் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments