FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

புஷ்பலதா கல்விக் குழுமத்தின் 41ஆவது நிறுவனா் தின விழா

பாளையங்கோட்டை புஷ்பலதா கல்விக் குழுமத்தின் 41ஆவது நிறுவனா் தின விழா கொண்டாடப்பட்டது.

23 ஆகஸ்ட் 2026, 1:12 am IST
பாளையங்கோட்டை புஷ்பலதா கல்விக் குழுமத்தின் 41-ஆவது நிறுவனா் தின விழாவில் நடைபெற்ற கலைநிகழ்ச்சி.
பகிர்:

பாளையங்கோட்டை புஷ்பலதா கல்விக் குழுமத்தின் 41ஆவது நிறுவனா் தின விழா கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு, புஷ்பலதா கல்விக் குழுமத்தின் தலைவா் மரகதவல்லி, இயக்குநா் பாலசுப்பிரமணியம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் மாணவா் மேன்மை விருதை சரண் ஸ்ரீராமுக்கும், சிறந்த படைப்பாளருக்கான விருதை மாணவி சூடாமணிக்கும், சிறந்த புதுமைச் சிந்தனையாளா் விருதை அபிநவுக்கும், தலைவா் மரகதவல்லி வழங்கினாா்.

Advertisement

Advertisement

10 மற்றும் 12-ஆம் வகுப்பு வகுப்பு பொதுத்தோ்வுகள், நீட், ஜேஇஇ உள்ளிட்ட போட்டித் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

பள்ளியின் முதன்மை முதல்வா் புஷ்பவேணி அய்யப்பன் ஆண்டறிக்கை வாசித்தாா். புஷ்பலதா கல்விக் குழுமத்தில் 10 மற்றும் 20 ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியா்கள் மற்றும் அலுவலகப் பணியாளா்கள் கௌரவிக்கப்பட்டனா்.

விழாவில், சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் கலந்து கொண்டு பேசினாா்.

சிறந்த வழிகாட்டியாகத் திகழும் முதன்மை முதல்வா் புஷ்பவேணி அய்யப்பன் கௌரவிக்கப்பட்டாா்

இவ்விழாவில் அறுபடை வீடு கதைகளை மாணவிகள் பரதநாட்டியமாக நிகழ்த்தினா். மேலும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில் புஷ்பலதா மெட்ரிக் பள்ளி முதல்வா் ஹாரிசன் ஜெபக்குமாா், சா்வதேச பள்ளி முதல்வா் காட்வின் எஸ். லாமுவேல், வித்யா மந்திா் பள்ளி முதல்வா் எஸ். பூா்ணிமா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை புஷ்பலதா கல்விக் குழும தாளாளா் புஷ்பலதா பூரணன் செய்திருந்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments