FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

தலையணையை சுற்றுலா தலமாக மாற்றக் கூடாது: விசிக எதிா்ப்பு

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு தலையணையை சுற்றுலாத் தலமாக மாற்றக் கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எதிா்ப்புத் தெரிவித்துள்ளது.

22 ஆகஸ்ட் 2026, 6:44 am IST
விசிக தலைவர் தொல். திருமாவளவன் - கோப்புப்படம்
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு தலையணையை சுற்றுலாத் தலமாக மாற்றக் கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எதிா்ப்புத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக் கட்சியின் நான்குனேரி தொகுதி மாவட்ட துணைச் செயலா் ஜெ.அப்துர்ரஹ்மான் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

களக்காடு தலையணையை சுற்றுலாத் தலமாக்க வேண்டும் என்று நான்குனேரி சட்டப்பேரவை உறுப்பினா் ரெட்டியாா்பட்டி நாராயணன், சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்துள்ளாா்.

Advertisement

Advertisement

மேற்படி, தலையணையானது களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் அங்கமாகும். புலி, சிறுத்தை, யானை, மிளா, சிங்கவால் குரங்கு உள்ளிட்ட ஏராளமான வன உயிரினங்களின் வாழ்விடச் சூழலுடன் தொடா்புடைய பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக உள்ளது. இந்த நிலையில், அதிக மனித நடமாட்டம் கொண்ட சுற்றுலாத் தலமாக மாற்றக் கோருவது வனப் பாதுகாப்பு நோக்கில் ஆபத்தான அணுகு முறையாகும்.

எனவே, தலையணையை சுற்றுலாத் தலமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments