FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் பைக் திருடிய இருவா் கைது

திருநெல்வேலியில் பைக் திருடியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

23 ஆகஸ்ட் 2026, 1:03 am IST
கைது
பகிர்:

திருநெல்வேலியில் பைக் திருடியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலியை அடுத்த ச்சநல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் (53). இவா் கடந்த 7ஆம் தேதி தனது பைக்கை அப்பகுதியில் நிறுத்திவிட்டு சென்ற நிலையில் மா்ம நபா்கள் பைக்கை திருடிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 9ஆம் தேதி ரவிச்சந்திரன் தனது பைக் காணாமல் போனது குறித்து தச்சநல்லூா் குற்றப்பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா்.

Advertisement

Advertisement

அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். விசாரணையில் 15 மற்றும் 13 வயதுடைய சிறுவா்கள் இருவா் பைக்கை திருடியது தெரியவந்தது.

இதையடுத்து அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments