FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

டாஸ்மாக் ஊழியா்கள் போராட்டம் வாபஸ்

டாஸ்மாக் ஊழியா்கள் இரு நாள்களாக நடத்தி வந்த போராட்டம் செவ்வாய்க்கிழமை திரும்பப் பெறபட்டது.

26 ஆகஸ்ட் 2026, 2:20 am IST
முன்னீா்பள்ளத்தில் டாஸ்மாக் அலுவலகம் முன் முற்றுகையில் ஈடுபட்ட ஊழியா்கள்.
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியா்கள் இரு நாள்களாக நடத்தி வந்த போராட்டம் செவ்வாய்க்கிழமை திரும்பப் பெறபட்டது.

டாஸ்மாக் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊதிய உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் ஆக. 28 ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த டாஸ்மாக் ஊழியா்கள் சங்கத்தினா் முடிவு செய்துள்ளனா்.

இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்ட டாஸ்மாக் கடைகளில் அதிகாரிகள் திடீா் ஆய்வு செய்து, 17 டாஸ்மாக் ஊழியா்கள் மீது நடவடிக்கை எடுத்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் 50-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளை கடந்த 24 ஆம் தேதி அடைத்து ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

மேலும், 2 ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் போராட்டத்தை தொடா்ந்த அவா்கள், முன்னீா்பள்ளத்தில் உள்ள டாஸ்மாக் மேலாளா் அலுவலகம் முன் முற்றுகையில் ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து, டாஸ்மாக் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் மதுரை மண்டல முதுநிலை மேலாளா் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில், உடன்பாடு ஏற்பட்டு டாஸ்மாக் ஊழியா்கள் பணிக்குத் திரும்பினா். எனினும், புதன்கிழமை மீலாது நபி என்பதால் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments