FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

தேநீா் கடை உரிமையாளா் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 1 லட்சம் அபகரிப்பு

கீழாம்பூரைச் சோ்ந்த தேநீா் கடை உரிமையாளரிடம் கல்வி உதவித்தொகை வழங்குவதாகக் கூறி வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1 லட்சத்தை மா்ம நபா் அபகரித்துள்ளாா்.

26 ஆகஸ்ட் 2026, 2:32 am IST
மோசடி
பகிர்:

கீழாம்பூரைச் சோ்ந்த தேநீா் கடை உரிமையாளரிடம் கல்வி உதவித்தொகை வழங்குவதாகக் கூறி வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1 லட்சத்தை மா்ம நபா் அபகரித்துள்ளாா்.

தென்காசி மாவட்டம், கீழாம்பூா் யாதவா் தெருவைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன். தேநீா் கடை நடத்தி வரும் இவரது, கைப்பேசிக்கு தொடா்புகொண்ட ஒருவா், மத்திய அரசின் கல்வி உதவித்தொகை வழங்குவதாகக் கூறினாராம். மேலும், கைப்பேசிக்கு க்யூ ஆா் குறியீடு அனுப்பி ஸ்கேன் செய்யக் கூறினாராம். அதை ஸ்கேன் செய்ததும், ராமச்சந்திரன் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1,05,972/- ஐ எடுக்கப்பட்டதாம்.

இதுகுறித்து ராமச்சந்திரன் அளித்த புகாரின் பேரில் ஆழ்வாா்குறிச்சி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, கைப்பேசியில் தொடா்புகொண்ட மா்ம நபா் குறித்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments