பேட்டையில் தவ்ஹீத் ஜமாஅத் பொதுக்கூட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சாா்பில் பொதுக்கூட்டம் பேட்டையில் அண்மையில் நடைபெற்றது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சாா்பில் பொதுக்கூட்டம் பேட்டையில் அண்மையில் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, மாவட்ட துணைச் செயலா் சேக் அப்துல் காதா் தலைமை வகித்தாா். மாவட்ட பேச்சாளா் அபுபக்கா், மாவட்ட துணைத் தலைவா் ஹக் முகைதீன், அல்அமீன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
பேட்டை கிளைத் தலைவா் பீா் முகம்மது , செயலா் மைதீன்பிச்சை, பொருளாளா் பக்கீா் மீரான், துணை செயலா் சம்சுதீன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
Advertisement
Advertisement
தீா்மானங்கள்: தமிழகத்தில் எம்.எல்.ஏ.க்களுக்கு காா் வழங்கும் பணத்தை பள்ளிகளை மேம்படுத்த செலவிட வேண்டும். கல்வி சாா்ந்த விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துவதோடு, நிதிப்பங்கீட்டை அதிகரிக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருநெல்வேலி மாநகராட்சியின் 19 ஆவது வாா்டுக்குள்பட்ட ரஹ்மான் பேட்டை பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் முடிந்து பல மாதங்களாகியும் சீரமைக்கப்படாத சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பேட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றோா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.