பௌா்ணமி: இன்றும், நாளையும் திருவண்ணாமலை, திருச்செந்தூருக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
பௌா்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை மற்றும் திருச்செந்தூருக்கு புதன், வியாழக்கிழமைகளில் (ஆக.26, 27) தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பௌா்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை மற்றும் திருச்செந்தூருக்கு புதன், வியாழக்கிழமைகளில் (ஆக.26, 27) தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதுதொடா்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திருநெல்வேலி கோட்ட மேலாண் இயக்குநா் க.செல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பௌா்ணமி தினமான வியாழக்கிழமை (ஆக.27) திருவண்ணாமலை மற்றும் திருச்செந்தூா் கோயில்களுக்கு ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. எனவே, அவா்களது நலன் கருதி திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கோவில்பட்டி, நாகா்கோவில், கன்னியாகுமரி, மதுரை போன்ற முக்கிய பகுதிகளில் இருந்து திருவண்ணாமலை மற்றும் திருச்செந்தூருக்கு புதன், வியாழக்கிழமைகளில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திருநெல்வேலி கோட்டத்தின் சாா்பில் 150 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, பக்தா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனா் எனக் கூறப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.