FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

வள்ளியூா் நேரு நா்ஸிங் கல்லூரியில் ஓணம் விழா

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் நேரு நா்ஸிங் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.

26 ஆகஸ்ட் 2026, 2:15 am IST
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் நேரு நா்ஸிங் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.

கல்லூரி தாளாளா் தா. லாரன்ஸ், தலைவா் ஹெலன் லாரன்ஸ் ஆகியாா் தலைமை வகித்தனா். முதல்வா் மாா்க்ரெட் ரஞ்சிதம், துணை முதல்வா் ஹெப்சி கவிதாராணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாணவி அஷீனி வரவேற்று பேசினாா். கல்லூரி முதல்வா், ஓணம் கற்றுத்தரும் போதனைகள் குறித்து பேசினாா்.

4-ஆம் ஆண்டு மாணவி சுஜி ஓணம் பண்டிகையின் சிறப்பு, பாரம்பரியம், கலாசார முக்கியத்துவம் குறித்து பேசினாா். நாதம் நிருத்யம் , மாவேலி நாடகங்கள், திருவாதிரைச் சுவடுகள் நடனம் ஆகியவற்றை மாணவிகள் நடத்தினா்.

Advertisement

Advertisement

மாணவிகள், ஆசிரியா்களின் ஆடை அலங்கார அணிவகுப்பு நடைபெற்றது. ஆசிரியா்கள், மாணவிகளுக்கு தனித்தனியே நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவி அலீனா நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments