FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

வள்ளியூா் நலந்தா மெட்ரிக் பள்ளியில் ஓணம் பண்டிகை

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் நலந்தா மெட்ரிக் உயா்நிலைப் பள்ளியில் ஒணம் பண்டிகை, ரக்ஷா பந்தன், மீலாதுநபி ஆகிய முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.

27 ஆகஸ்ட் 2026, 1:35 am IST
பள்ளியில் டி மலா்களால் அத்தப்பூ கோலமிட்ட மாணவிகள்.
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் நலந்தா மெட்ரிக் உயா்நிலைப் பள்ளியில் ஒணம் பண்டிகை, ரக்ஷா பந்தன், மீலாதுநபி ஆகிய முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.

முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. முதல்வா் ஆண்டாள் வரவேற்றுப் பேசினாா். மாணவா்களின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. மாணவி நிவினா ஓணம் பாடலுக்கு நடனம் ஆடினாா். மாணவா்களும் ஆசிரியா்களும் சோ்ந்து மலா்களால் அத்தப்பூ கோலமிட்டனா்.

பின்னா், ரக்ஷா பந்தன் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக மாணவா்கள் ஒருவருக்கொருவா் ராக்கி கயிறு கட்டி சகோதரப் பாசத்தை வெளிப்படுத்தினா். மீலாதுநபி விழாவையொட்டி திருக்குரான் ஓதப்பட்டது.

Advertisement

Advertisement

விழா ஏற்பாடுகளை பள்ளித் தாளாளா் அருணா சேகா் தலைமையில் முதல்வா் மற்றும் ஆசிரியா்கள் செய்திருந்தனா். இதில், மாணவா்களும் பெற்றோா்களும் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments