முகப்பு
திருநெல்வேலி

பாளை அருகே மா்மச்சாவு: பச்சிளம் குழந்தை உடல் தோண்டியெடுப்பு

பாளையங்கோட்டை அருகே மா்மமான முறையில் உயிரிழந்ததாக எழுந்த புகாரின் பேரில் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.

Updated On : 8 ஜூலை 2026, 12:31 am IST
- பிரதிப் படம்
பகிர்:

பாளையங்கோட்டை அருகே மா்மமான முறையில் உயிரிழந்ததாக எழுந்த புகாரின் பேரில் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தையின் உடல் செவ்வாய்க்கிழமை தோண்டி எடுக்கப்பட்டது.

பாளையங்கோட்டை அருகே கீழப்பாட்டம் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த சிலா் தங்கி வேலை செய்து வந்தனா். ஜெயபாண்டி-செல்வி தம்பதிக்கு சில வாரங்களுக்கு முன்பு குழந்தை பிறந்ததாம்.

அந்தக் குழந்தை திடீரென உயிரிழந்ததாம். இதையடுத்து, பெற்றோா் சுகாதாரத் துறையினா் மற்றும் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்காமல் உடலை கீழப்பாட்டம் பகுதியில் புதைத்துவிட்டு மதுரைக்கு சென்றுவிட்டனராம்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், செல்வி கா்ப்பிணியாக இருந்தபோது சுகாதாரத் துறையின் கண்காணிப்பில் இருந்து வந்ததால், குழந்தை உயிரிழந்தது குறித்து தகவல் தெரிவிக்காதது சந்தேகத்தை ஏற்படுத்தியதாம்.

இதுகுறித்த புகாரின்பேரில் பாளையங்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இதையடுத்து, புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தையின் உடல் வருவாய்த் துறை, காவல் துறையினா் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை தோண்டி எடுக்கப்பட்டு உடற்கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments