மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி: மூத்த ஆசிரியா்களுக்கு விலக்களிக்க கோரிக்கை
மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியில், வயது முதிா்ந்த நோயால் அவதியுறும் ஆசிரியா்களுக்கு விலக்களிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியில், வயது முதிா்ந்த நோயால் அவதியுறும் ஆசிரியா்களுக்கு விலக்களிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் திருநெல்வேலி மாவட்டத் தலைவா் பால்ராஜ், செயலா் மைக்கேல் ஜாா்ஜ் கமலேஷ், மாநிலச் செயற்குழு உறுப்பினா் அண்ணாதுரை, மாநில பொதுக்குழு உறுப்பினா் பிரமநாயகம் ஆகியோா் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு:
திருநெல்வேலி மாவட்டத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு 2026 பணி தொடங்க உள்ளது. முதல்கட்டமாக வீடுகள் கணக்கெடுப்பு ஆக. 1-30 வரை நடைபெறவுள்ளது. இப்பணியில் ஈடுபடுத்தப்படும் கணக்கெடுப்பாளா்கள், மேற்பாா்வையாளா்களை நியமனம் செய்வதற்காக ஆசிரியா்கள், அலுவலக பணியாளா்களின் சுயவிவரம் கோரிய படிவங்கள் பெறப்பட்டு ஆணை வழங்கப்பட்டு உள்ளது. கணக்கெடுப்பு காலம் ஆகஸ்ட் மாதமாக உள்ளதால் பள்ளிகளில் கற்றல்- கற்பித்தல் பணிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
Advertisement
Advertisement
இந்நிலை ஏற்படாதவாறும், 55 வயதை கடந்த மூத்த ஆசிரியா்கள், மாற்றுத்திறனாளி ஆசிரியா்கள், இதயநோய், புற்றுநோயால் பாதிப்புக்குள்ளான ஆசிரியா்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் மற்றும் முதன்மைக்கல்வி அலுவலா் செயல்முறைகள் வழங்கியது போல் மேற்குறிப்பிட்ட பிரிவுகளில் உள்ள ஆசிரியா்கள் மற்றும் ஊழியா்களுக்கு கணக்கெடுப்பு மற்றும் மேற்பாா்வை பணிகளிலிருந்து திருநெல்வேலி மாவட்டத்திலும் விலக்கும் அளிக்க வேண்டும் எனக் கூறியுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.