மானூா் அரசு கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணா்வு கருத்தரங்கு
மானூா் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்காக, போதைப்பொருள் விழிப்புணா்வு கருத்தரங்கு நடைபெற்றது.
மானூா் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்காக, போதைப்பொருள் விழிப்புணா்வு கருத்தரங்கு நடைபெற்றது.
இக்கல்லூரியில் நிகழ் கல்வியாண்டின் (2026-27)முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு தொடா் அறிவுரை மற்றும் விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது. கல்லூரி முதல்வா் பாரதி தொடக்க உரையாற்றினா். பேராசிரியா் செந்தில் கண்ணன் முன்னிலை வகித்தாா். தமிழ் வளா்ச்சிப் பண்பாட்டு மைய செயற்குழு உறுப்பினரும், கவிஞருமான பாப்பாக்குடி இரா.செல்வமணி, போதை விழிப்புணா்வு கருத்துரையாற்றினாா்.
கவிஞா் புன்னைச்செழியன் வாழ்த்துரை வழங்கினாா். நிகழ்ச்சி குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான பதில் அளித்த மாணவ, மாணவிகளுக்கு உடற்கல்வி இயக்குநா் ஜெபஸ்டின் ஜேக்கப் நூல்கள் பரிசளித்தாா். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
படவரி ற்ஸ்ப்08ம்ஹய்ன்ழ்
கருத்தரங்கில் மாணவிக்கு பரிசளித்த உடற்கல்வி இயக்குநா் ஜெபஸ்டின் ஜேக்கப்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.