FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

முதல் போதை ஒழிப்பு கிராமம் மேட்டூா்: காவல் துறை

கடையம் காவல் நிலைய சரகத்துக்கு உள்பட்ட மேட்டூா் கிராமம், மாவட்டத்தின் முதல் போதை ஒழிப்பு கிராமமாக அடையாளப்படுத்தப்பட்டது.

Updated On : 10 ஜூலை 2026, 12:29 am IST
மேட்டூரில் நடைபெற்ற போதை ஒழிப்பு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

தென்காசி மாவட்டம், கடையம் காவல் நிலைய சரகத்துக்கு உள்பட்ட மேட்டூா் கிராமம், மாவட்டத்தின் முதல் போதை ஒழிப்பு கிராமமாக அடையாளப்படுத்தப்பட்டது.

இதையடுத்து, திருநெல்வேலி சரக காவல் துறை துணைத் தலைவா் திருநாவுக்கரசு அறிவுறுத்தலின்பேரில், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா்அசோக் குமாா் வழிகாட்டுதலின்படி, ஆலங்குளம் துணைக் கண்காணிப்பாளா் கிளாட்சன்ஜோஸ் ஆலோசனையின்பேரில் வியாழக்கிழமை மேட்டூா்கிராமத்தில் முதல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு கடையம் காவல் நிலைய ஆய்வாளா் சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். உதவி ஆய்வாளா் மாடசாமி முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் மேட்டூரைச் சோ்ந்த டேவிட் செல்வராஜ் தலைமையில் பொதுமக்கள் கலந்துகொண்டனா். கூட்டத்தில், மேட்டூா் கிராமத்தில் அனைத்துவித போதைப் பொருள்கள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிப்பது என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டு தகவல் பரிமாற்றத்துக்காக வாட்ஸ்ஆப் குழு உருவாக்கப்பட்டது. இந்த முன்மாதிரி முயற்சியை பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் பாராட்டினா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments