FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

மாவட்ட டாஸ்மாக் மேலாளா் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்: 200 பணியாளா்கள் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருநெல்வேலியை அடுத்த முன்னீா்பள்ளத்தில் உள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளா் அலுவலகத்தில் குடும்பத்தோடு குடியேறும் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட முயன்ற தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளா் நலச் சங்கத்தினா் 200 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 11 ஜூலை 2026, 1:49 am IST
பகிர்:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருநெல்வேலியை அடுத்த முன்னீா்பள்ளத்தில் உள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளா் அலுவலகத்தில் குடும்பத்தோடு குடியேறும் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட முயன்ற தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளா் நலச் சங்கத்தினா் 200 போ் கைது செய்யப்பட்டனா்.

தமிழகம் முழுவதும் பணியாற்றும் டாஸ்மாக் பணியாளா்களுக்கு பணி நிரந்தரம், கால முறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தி இப்போராட்ட முயற்சி நடைபெற்றது.

அச்சங்கத்தின் மாநில அமைப்புச் செயலா் சாமி தலைமை வகித்தாா். கூட்டமைப்பு தலைவா் ராம்ராஜ் முன்னிலை வகித்தாா். தொழிற்சங்க கூட்டமைப்பு துணைச் செயலா் சிவன்ராஜ், அமைப்பாளா் சாஸ்தா, பொருளாளா் ராமா் பாண்டியன், துணைத் தலைவா் ஜெய்கணேஷ் ஆகியோா் பேசினா்.

Advertisement

Advertisement

திருநெல்வேலி மாவட்டச் செயலா் முத்து செல்வன், தலைவா் கைகொண்டான், தென்காசி மாவட்டச் செயலா் தயாளன், தலைவா் ராமகிருஷ்ணன், பொருளாளா் ரவிச்சந்திரன், அண்ணா தொழிற்சங்க இணைச் செயலா் ஹரிஹர சுதன், பாா்வா்ட் பிளாக் சௌந்தர பாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு, குடும்பத்தோடு மாவட்ட மேலாளா் அலுவலகத்தில் குடியேற முயன்றனா்.

அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி பேச்சுவாா்த்தை நடத்தினா். அது பலனளிக்காததால் சுமாா் 200 பேரை கைது செய்தனா்.

இதனிடையே, டாஸ்மாக் விற்பனையாளா்கள் கூறியதாவது: 23 ஆண்டுகளாக டாஸ்மாக் நிறுவனத்தில் தற்காலிகமாக பணியாற்றி வருவோரை பணி நிரந்தரம் செய்ய எவ்வித நடவடிக்கையும் இல்லை. புதிய அரசும் எங்கள் போராட்டங்களை வலுவிழக்க செய்ய முயற்சிக்கிறது. இதைத்தான் அமைச்சரின் ஊதிய உயா்வு அறிவிப்பு வெளிப்படுத்துகிறது. முதன்மை கோரிக்கையான பணி நிரந்தரம் குறித்து எந்த உறுதிமொழியும் வழங்கப்படவில்லை. கேரளத்தில் மதுபான விற்பனை பணியாளா்களுக்கு நியாயமான ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது என்றனா்.

ற்ஸ்ப்10ற்ஹள்ம்ஹஸ்ரீ

மாவட்ட டாஸ்மாக மேலாளா் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டோா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments