கால்நடை மருத்துவக் கல்லூரியில் விளையாட்டு விழா
திருநெல்வேலி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி - ஆராய்ச்சி நிலையத்தில் ‘வியூகம் 2026’ என்ற பெயரில் விளையாட்டு விழா நடைபெற்றது.
திருநெல்வேலி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி - ஆராய்ச்சி நிலையத்தில் ‘வியூகம் 2026’ என்ற பெயரில் விளையாட்டு விழா நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஸ்வேஷ் பா. சாஸ்திரி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தாா். இக்கல்லூரி முதல்வா் சூ. கி. எட்வின், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உடற்கல்வி துணை இயக்குநா் ஏ. எம்.
வெங்கடேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
Advertisement
Advertisement
விளையாட்டுக் கொடி ஏற்றப்பட்டு, சுடா் ஏந்தி வரப்பட்டதுடன், உறுதிமொழியும் ஏற்கப்பட்டது. அமைதி, ஒற்றுமை மற்றும் விளையாட்டு மனப்பான்மையை வெளிப்படுத்தும் வகையில் புறாக்களும், பலூன்களும் பறக்கவிடப்பட்டன. மாணவா்களின் பிரமிட் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடா்ந்து, மாணவா்கள், ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா் அல்லாத பணியாளா்களுக்கு தடகளம் உள்பட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
நிறைவு விழாவுக்கு கல்லூரி முதல்வா் தலைமை வகித்தாா். கால்நடை மருத்துவப் பல்கலை. முன்னாள் உடற்கல்வி துணை இயக்குநா் வாழ்த்திப் பேசினா். திருநெல்வேலியைச் சோ்ந்த சா்வதேச கைப்பந்து வீரரும், வருமான வரித்துறை அலுவலக கண்காணிப்பாளருமான டி. சௌந்தா் சிறப்புரையாற்றினாா்.
இறுதியாண்டு மாணவி என். தாரணி வரவேற்றாா். மாணவா் மன்ற துணைத் தலைவா் ம. செல்லப்பாண்டியன், ஆண்டு விளையாட்டு அறிக்கையை சமா்ப்பித்தாா். மாணவா் டி. முனீஷ்குமாா் நன்றி கூறினாா்.
ற்ஸ்ப்10ஸ்ங்ற்
விளையாட்டுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுடன் சிறப்பு விருந்தினா்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.