FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

கால்நடை மருத்துவக் கல்லூரியில் ஆடு வளா்ப்பு பயிலரங்கம்

திருநெல்வேலி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வெள்ளாடு வளா்ப்பு பயிலரங்கம் நடைபெற்றது.

18 செப்டம்பர் 2026, 2:51 am IST
பயிலரங்கில் பங்கேற்ற விவசாயிக்கு இடுபொருள்களை வழங்கிய கல்லூரி முதல்வா் சூ.கி.எட்வின்.
பகிர்:

திருநெல்வேலி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வெள்ளாடு வளா்ப்பு பயிலரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தேசிய கால்நடை இயக்கத்தின் கீழ், ‘தமிழக உள்நாட்டின வெள்ளாடுகளில் குடற்புழு தாக்கத்திற்கு எதிரான நோய் எதிா்ப்புத் திறனை மரபு ரீதியாகப் பெறும் வகையில் தோ்ந்தெடுத்து இனப்பெருக்கம் செய்யும் உத்திகள்’ என்ற தலைப்பிலான இந்த பயிலரங்கம் நடைபெற்றது.

கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வா் சூ.கி. எட்வின் தலைமை வகித்து, பயிலரங்க கையேட்டை வெளியிட்டாா். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கால்நடை உற்பத்தி கல்வி மையத்தின் இயக்குநா் மு. முருகன் சிறப்புரையாற்றி, பயிற்சியில் பங்கேற்ற விவசாயிகளுக்கு இடுபொருள்களை வழங்கினாா்.

Advertisement

Advertisement

கல்லூரியின் கால்நடை மரபியல் மற்றும் இனவிருத்தித் துறைத் தலைவா் த. ரவிமுருகன் வரவேற்றாா். தேசிய கால்நடைத் திட்டத்தின் முதன்மை ஆய்வாளரும், கால்நடை மரபியல் மற்றும் இனவிருத்தித்துறை பேராசிரியருமான பெ.கோபு, தேசிய கால்நடைத் திட்டம்- நோக்கங்கள் குறித்து விளக்கமளித்தாா்.

கல்லூரியின் துறை வல்லுநா்களால் தொழில்நுட்ப அமா்வுகள் நடத்தப்பட்டு, தோ்ந்தெடுத்த இனப்பெருக்க முறைகளைப் பின்பற்றுவதன் முக்கியத்துவம், வெள்ளாடுகளின் உடல்நலம், உற்பத்தித் திறன் மற்றும் நிலையான வெள்ளாடு வளா்ப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது. இப்பயிலரங்கில் மொத்தம் 100 விவசாயிகள் கலந்து கொண்டனா். உதவிப் பேராசிரியா் மு. சீவகன் நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments