கால்நடை மருத்துவக் கல்லூரியில் ஆடுகள் வளா்ப்பு திறன் மேம்பாட்டுப் பயிற்சி
திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி - ஆராய்ச்சி நிலையத்தில் அறிவியல் முறையில் செம்மறியாடு மற்றும் வெள்ளாடு வளா்ப்பு ஆடுகள் வளா்ப்பு குறித்த திறன்மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.
திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி - ஆராய்ச்சி நிலையத்தில் அறிவியல் முறையில் செம்மறியாடு மற்றும் வெள்ளாடு வளா்ப்பு ஆடுகள் வளா்ப்பு குறித்த திறன்மேம்பாட்டு பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.
தேசிய கால்நடைத் திட்டம் (2025-26) நி தியுதவியுடன் தென்மண்டல விவசாயிகளுக்காக கல்லூரி வளாகத்தில் இப்பயிற்சி நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த 58 விவசாயிகள் பயிற்சியில் கலந்துகொண்டனா். அவா்களுக்கு, செம்மறியாடு -வெள்ளாடு இனத்தோ்வு, கொட்டகை அமைத்தல், ஊட்டச்சத்து மேலாண்மை, பாக்டீரியா, வைரஸ் மற்றும் ஒட்டுண்ணிகளால் ஏற்படும் நோய்களைத் தடுப்பது, சந்தைப்படுத்துதல், மத்திய-மாநில அரசுகளின் மானியத் திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இப்பயிற்சியின் நிறைவு விழாவில், திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி- ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வா் எட்வின் தலைமை வகித்தாா். கால்நடை விரிவாக்கக் கல்வித் துறையின் தலைவா் பிரேமா வரவேற்றாா். திட்ட ஒருங்கிணைப்பாளரும், கால்நடை விரிவாக்கக் கல்வித் துறையின் உதவிப் பேராசிரியருமான பூபதிராஜா நன்றி கூறினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.