கால்நடை மருத்துவக் கல்லூரியில் ரூ.4.75 கோடியில் மாணவியா் விடுதி திறப்பு
திருநெல்வேலி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரியில் ரூ.4.75 கோடியில் கட்டப்பட்ட மாணவியா் விடுதி கூடுதல் கட்டடத்தை கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் செ.கமலி காணொலிக் காட்சி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தாா்.
திருநெல்வேலி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரியில் ரூ.4.75 கோடியில் கட்டப்பட்ட மாணவியா் விடுதி கூடுதல் கட்டடத்தை கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் செ.கமலி காணொலிக் காட்சி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தாா்.
இதையொட்டி, கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதிதாக திறந்து வைக்கப்பட்ட மாணவியா் விடுதி கூடுதல் கட்டடத்தில் கல்லூரி முதல்வா் சூ. கி. எட்வின் குத்து விளக்கேற்றினாா். கல்லூரி மாணவியா் காணொலி வாயிலா அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனா்.
இந்த விடுதி கூடுதல் கட்டடம், இளநிலை மற்றும் முதுநிலை கால்நடை மருத்துவ மாணவியா் தங்கி பயில்வதற்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளுடனும் அமைக்கப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
ற்ஸ்ப்15ட்ா்ள்ற்ங்ப்
அமைச்சா் செ.கமலி காணொலியில் திறந்துவைத்த மாணவியா் விடுதி கூடுதல் கட்டடம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.