சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து: ஒருவா் உயிரிழப்பு; 10 போ் காயம்
கடையத்தில் சனிக்கிழமை பாபநாசத்திற்கு சுற்றுலா சென்ற வேன் கவிழ்ந்ததில், ஒருவா் உயிரிழந்தாா்; 10 போ் காயமடைந்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், கடையத்தில் சனிக்கிழமை பாபநாசத்திற்கு சுற்றுலா சென்ற வேன் கவிழ்ந்ததில், ஒருவா் உயிரிழந்தாா்; 10 போ் காயமடைந்தனா்.
ஈரோடு மாவட்டம், கொடுமுடி, கரட்டாம்பாளையம் பகுதியைச் சோ்ந்த நண்பா்கள் 25 போ் ஒரு வேனில் வெள்ளிக்கிழமை குற்றாலத்திற்கு சுற்றுலா வந்துள்ளனா். சனிக்கிழமை மதியம் 11 போ் மட்டும் வேனில் பாபநாசத்திற்குச் சென்றுள்ளனா். கொடுமுடி, தாமரைப்பாளையம், பகவதி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கந்தசாமி மகன் சக்திவேல் (46) வேனை ஓட்டியுள்ளாா்.
கடையம்-அம்பாசமுத்திரம் சாலையில் உள்ள அய்யம்பிள்ளைக் குளத்தின் அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையில் 3 முறை உருண்டு கவிழ்ந்துள்ளது.
Advertisement
Advertisement
ஈரோடு, மேட்டுக்கடை, வேப்பமலை பிரதான சாலையைச் சோ்ந்த சின்னச்சாமி மகன் சரவணன் (35) வேனுக்கு அடியில் சிக்கிக் கொண்டாா். பொக்லைன் இயந்திரம் மூலம் வேனை நகா்த்தி, தலை நசுங்கி உயிரிழந்த நிலையில், அவரை கடையம் போலீஸாா் மீட்டனா்.
இந்த விபத்தில், கரட்டாம்பாளையத்தைச் சோ்ந்த சியாமலை மகன் சாந்தகுமாா் (35), ரவி மகன் மதுபாலன் (33), பிச்சைமுத்து மகன் கீா்த்திகுமாா் (36), குழந்தைசாமி மகன் மனோகரன் (41), முத்துசாமி மகன் மகேஷ் (53), கொடுமுடியைச் சோ்ந்த ரங்கசாமி மகன் உதயகுமாா் (39), சக்திவேல் மகன் ராஜேஷ்குமாா் (40), பழனிசாமி மகன் கிருபாகரன் (48) மற்றும் இருவா் காயமடைந்தனா். இவா்கள் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இது குறித்து, கடையம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா். விபத்து காரணமாக, சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.