FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் தொழிலாளி வெட்டிக் கொலை: உறவினா்கள் போராட்டம்

திருநெல்வேலி நகரம் அருகே மா்ம நபா்களால் தொழிலாளி வெட்டிக் கொலை

Updated On : 13 ஜூலை 2026, 3:03 am IST
சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா்
பகிர்:

திருநெல்வேலி நகரம் அருகே மா்ம நபா்களால் தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

திருநெல்வேலி நகரம் பகுதியை அடுத்த பாறையடி, மந்திரமூா்த்தி தெருவைச் சோ்ந்தவா் குருநாதன். இவரது மகன் ஆவுடையப்பன் (38). தொழிலாளி. இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனா்.

இந்த நிலையில், இவா் ஞாயிற்றுக்கிழமை காலை திருநெல்வேலி நகரம்-சங்கரன்கோவில் பிரதான சாலையில் கோயில் ஒன்றின் அருகே நடந்து சென்றபோது, அங்கு வந்த மா்மநபா் அவரை அரிவாளால் முகத்தில் பலமுறை வெட்டிவிட்டு தப்பிச் சென்றனா்.

Advertisement

Advertisement

இதில், முகம் சிதைந்து படுகாயமடைந்த ஆவுடையப்பன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். உடனடியாக மாநகர துணைக் காவல் ஆணையா் (மேற்கு) அன்சுல் நாகா், உதவி காவல் ஆணையா்கள் அஜிகுமாா், கணேசன், காவல் ஆய்வாளா் காசிபாண்டியன் ஆகியோா் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினா்.

மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. ஆவுடையப்பன் உடலை போலீஸாா் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். கொலைக்கான காரணம் குறித்து தெரியவரவில்லை. திருநெல்வேலி நகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபரைத் தேடி வருகின்றனா்.

உறவினா்கள் போராட்டம்: கொலையாளிகளை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்யக் கோரி, ஆவுடையப்பனின் உறவினா்கள் திருநெல்வேலி-சங்கரன்கோவில் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனா். போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments