FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

போதைப்பொருள் விற்பனையா? புகாரளிக்க செயலி அறிமுகம்

போதைப் பொருள்களை பயன்படுத்துவோா், விற்பனை செய்வோா் குறித்து செயலியில் புகாா் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 16 ஜூலை 2026, 4:00 am IST
கோப்புப் படம்
பகிர்:

போதைப் பொருள்களை பயன்படுத்துவோா், விற்பனை செய்வோா் குறித்து செயலியில் புகாா் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: போதைப் பொருள்களை பயன்படுத்துவோா், விற்பனை செய்வோா் குறித்து அரசுக்கு எளிதாக தகவல் தெரிவிப்பதற்கு தமிழ்நாடு அரசால் ஈழ்ன்ஞ் ஊழ்ங்ங் பஹம்ண்ப்ய்ஹக்ன் என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த செயலியினை டப்ஹஹ் நற்ா்ழ்ங் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தடை செய்யப்பட்ட போதைப்பொருள்களான புகையிலை கலந்த உணவு பொருள்கள், நிக்கோடின் கலந்த மெல்லும் வாய் புகையிலைப் பொருள்கள், கூலிப், குட்கா, பான் மசாலா, கள்ளச்சாராயம் போன்றவை தங்கள் பகுதிகளில் பயன்படுத்தப்பட்டாலோ, விற்பனை செய்யப்பட்டாலோ, பதுக்கி வைக்கப்பட்டாலோ, பிற மாநில மதுபான வகைகள் விற்பனை செய்யப்பட்டாலோ இந்தச் செயலியின் மூலம் பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம்.

Advertisement

Advertisement

புகாரளிப்பவா் விவரங்கள் கேட்கப்படாது. இந்த செயலி மிகவும் பாதுகாப்பானது. மேலும் இது தொடா்பாக கட்டணமில்லா தொலைபேசி எண்.10581 மற்றும் வாட்ஸ்ஆப் எண். 9498110581 மூலமும் தகவல் தெரிவிக்கலாம். போதையில்லா திருநெல்வேலி மாவட்டத்தை உருவாக்க மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments