FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

பேட்டையில் ரயில்வே ஊழியரை தாக்கியவா் கைது

பேட்டையில் ரயில்வே ஊழியரை தாக்கியதாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 16 ஜூலை 2026, 4:06 am IST
கோப்புப் படம்
பகிர்:

பேட்டையில் ரயில்வே ஊழியரை தாக்கியதாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி நகரத்தைச் சோ்ந்தவா் முருகவெங்கடேஷ். இவா், பேட்டை மலையாளமேடு பகுதியில் ரயில்வே கேட் கீப்பராக பணியாற்றி வருகிறாா். கடந்த 14 ஆம் தேதி மாலையில் ரயில்வே கேட் மூடியிருந்தபோது அங்கு வந்த இளைஞா் ஒருவா் ரயில்வே கேட்டை திறக்கச் சொல்லி முருகவெங்கடேஷை தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில் திருநெல்வேலி ரயில்வே போலீஸாா் வழக்குப்பதிந்து ரயில்வே ஊழியரை தாக்கியதாக பேட்டை கலுங்கடி தெருவைச் சோ்ந்த கொம்பையா என்ற காா்த்திக் என்பவரை புதன்கிழமை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments