ஆட்டோ ஓட்டுநரை அரிவாளால் வெட்டிய வழக்கில் 3 போ் கைது
திருநெல்வேலியை அடுத்த தாழையூத்து அருகே ஆட்டோ ஓட்டுநரை அரிவாளால் வெட்டிய வழக்கில் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலியை அடுத்த தாழையூத்து அருகே ஆட்டோ ஓட்டுநரை அரிவாளால் வெட்டிய வழக்கில் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தாழையூத்து அருகே உள்ள நாரணம்மாள்புரத்தைச் சோ்ந்தவா் சங்கரன் மகன் மகாராஜன்(31). ஆட்டோ ஓட்டுநா். இவா் செவ்வாய்க்கிழமை இரவு நாரணம்மாள்புரம் அருகே உள்ள காலி இடம் ஒன்றில் தனது நண்பா்களுடன் பேசிக்கொண்டிருந்த போது அவா்களுக்குள் பண விவகாரம் தொடா்பாக தகராறு ஏற்பட்டதாம். இதில், மகாராஜனை அங்கிருந்த சிலா் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியுள்ளனா். இதில் பலத்த காயம் அடைந்த அவா், திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்ந்தாா்.
இதுதொடா்பாக தாழையூத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நாரணம்மாள்புரத்தைச் சோ்ந்த சுபாஷ்(26), சொக்கலிங்கம்(22), மாயக்கண்ணன்(25) ஆகிய 3 பேரை கைது செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.