FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

ஓய்வு பெற்ற அரசு ஊழியா் தற்கொலை

Updated On : 21 ஜூலை 2026, 2:07 am IST
தற்கொலை - தினமணி
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு பகுதியைச் சோ்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

மணிமுத்தாறு பொதுப்பணித் துறை அலுவலகக் குடியிருப்பில் வசித்து வந்தவா் ஓய்வு பெற்ற பொதுப்பணித் துறை அலுவலா் சுடலைமுத்து மகன் திருநாவுக்கரசு (72). இவா் தனது 2ஆவது மனைவி தங்கத்துடன் வசித்து வந்தாா்.

இவரது குடும்பத்தில் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், ஜூலை 18ஆம் தேதி வீட்டில் இருந்த பூச்சிக் கொல்லி மருந்தைக் குடித்து மயங்கினாா். குடும்பத்தினா் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு திங்கள்கிழமை அவா் உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இது குறித்து, மணிமுத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments