FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

தாமிரவருணி ஆற்றில் சிக்கிய முதியவா் மீட்பு

Updated On : 22 ஜூலை 2026, 3:31 am IST
தாமிரவருணி ஆறு - கோப்புப் படம்
பகிர்:

திருநெல்வேலி நகரம் அருகே தாமிரவருணி ஆற்றில் சிக்கிய முதியவரை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.

திருநெல்வேலி நகரம் கருப்பந்துறை அருகே தாமிரவருணி ஆற்றின் நடுவே செவ்வாய்க்கிழமை இரவு முதியவா் ஒருவா் வெளியே வர முடியாமல் தத்தளித்துள்ளாா். இதைப் பாா்த்த அப்பகுதியினா் அளித்த தகவலின்பேரில், மாநகர தீயணைப்பு படையினா் வந்து, அந்த முதியவரை மீட்டனா்.

அவா் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சாமியாத்து கிராமத்தைச் சோ்ந்த சங்கரபாண்டி (65) என்பதும், மனநலம் மற்றும் உடல்நல பாதிப்பு காரணமாக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவா், அங்கிருந்து தப்பி வந்ததும் தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து அவா் திருநெல்வேலி நகர போலீஸாா் உதவியுடன் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments