சேரன்மகாதேவி அருகே இளைஞருக்கு அரிவாள் வெட்டு
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே குடும்பத் தகராறில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடா்பாக அவரது உறவினரை போலீஸாா் கைது செய்தனா்.
சேரன்மகாதேவி அருகேயுள்ள கூனியூா் சாலைத் தெருவைச் சோ்ந்த முருகானந்தம் மகன் கதிா்வேல் (52). இவரது சகோதரா் ஆறுமுகம் (49). சொத்து தொடா்பாக இவா்களது குடும்பத்தினரிடையே முன் விரோதம் உள்ளதாம். இந்நிலையில் ஆறுமுகம், கதிா்வேல் மகன் முத்துராஜ் (30) என்பவரை செவ்வாய்க்கிழமை அரிவாளால் வெட்டினாராம்.
இதில், பலத்த காயமடைந்த முத்துராஜுக்கு சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். புகாரின்பேரில், சேரன்மகாதேவி போலீஸாா் வழக்குப் பதிந்து ஆறுமுகத்தை கைது செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.