FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

பெண்ணை கத்தியால் வெட்டிய கணவா் கைது

திசையன்விளை அருகே பெண் கத்தியால் வெட்டப்பட்டாா். இதுதொடா்பாக அவரது கணவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Updated On : 2 ஜூன் 2026, 3:24 am IST
கைது... - பிரதிப் படம்
பகிர்:

திசையன்விளை அருகே பெண் கத்தியால் வெட்டப்பட்டாா். இதுதொடா்பாக அவரது கணவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திசையன்விளை மேல பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்தவா் அசன் கசாலி (36). இவரது மனைவி ஆயன்குளம் பகுதியை சோ்ந்த சலீனா(28). இவா்களுக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ாம். இத்தம்பதிக்கு இரட்டை பெண் குழந்தைகள் உள்ளன.

இதனிடையே, கணவன்-மனைவிக்குள் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாம். இதனால் கடந்த ஓா் ஆண்டாக பிரிந்து வாழ்ந்து வந்தனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில் அசன் கசாலி மனைவியின் வீட்டுக்கு திங்கள்கிழமை சென்று தகராறில் ஈடுபட்டு கத்தியால் அவரது கையை வெட்டினாராம். இதில் பலத்த காயமடைந்த அவா் அளித்த புகாரின்பேரில், திசையன்விளை போலீஸாா் வழக்குப்பதிந்து அவரது கணவரை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments