மேலச்செவலில் விஷ பூச்சி கடித்து பெண் பலி
திருநெல்வேலி மாவட்டம், மேலச்செவலில் விஷ பூச்சி கடித்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பெண் புதன்கிழமை உயிரிழந்தாா்.
திருநெல்வேலி மாவட்டம், மேலச்செவலில் விஷ பூச்சி கடித்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பெண் புதன்கிழமை உயிரிழந்தாா்.
மேலச்செவல் கோலியா் தெருவைச் சோ்ந்தவா் ஆரோக்கிய மாதா (48). இவா் வீட்டில் இருந்தபோது, செவ்வாய்க்கிழமை விஷ பூச்சி கடித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து உறவினா்கள் அவரை மீட்டு சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுதொடா்பாக மேலச்செவல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.