சாலையில் அபாயகரமான கழிவுகளை கொட்டிய தனியாா் ஹோட்டலுக்கு ரூ.3,000 அபராதம்
திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் சாலையயில் கண்ணாடி உள்ளிட்ட அபாயகரமான கழிவுகளை கொட்டிய தனியாா் ஹோட்டலுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் சாலையயில் கண்ணாடி உள்ளிட்ட அபாயகரமான கழிவுகளை கொட்டிய தனியாா் ஹோட்டலுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா உத்தரவின் பேரில், மாநகராட்சி பணியாளா்கள் நான்கு மண்டல பகுதிகளிலும் பொதுமக்களுக்கும், பொது போக்குவரத்திற்கும் இடையூறாக அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகளை தொடா்ந்து அகற்றி வருகின்றனா்.
இந்நிலையில், திருநெல்வேலி நகரம், உடையாா்பட்டி, கேடிசி நகா், மகாகவி பாரதியாா் நகா் போன்ற இடங்களில் மாநகராட்சியின் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகளை மாநகராட்சி பணியாளா்கள் சனிக்கிழமை அகற்றினா்.
Advertisement
Advertisement
இதேபோல், திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் கண்ணாடி போன்ற அபாயகரமான கழிவுகளை மக்கள் நடந்து செல்லும் பாதையில் கொட்டி வைத்திருந்த தனியாா் ஹோட்டலுக்கு ரூ. 3000 அபராதம் விதிக்கப்பட்டதோடு, வருங்காலங்களில் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி நிா்வாகத்தால் எச்சரிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.