FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

தாமிரவருணி சீரமைப்புத் திட்ட அறிக்கை: விரைந்து உருவாக்க நெல்லை எம்.பி. வலியுறுத்தல்

Updated On : 15 ஜூன் 2026, 12:05 am IST
தாமிரவருணி ஆறு. - கோப்புப் படம்
பகிர்:

தாமிரவருணி சீரமைப்புக்கான திட்ட அறிக்கையை விரைந்து உருவாக்க, திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ் வலியுறுத்தியுள்ளாா்.

திருநெல்வேலி மாவட்ட வளா்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க வந்த மாவட்ட பொறுப்பு அமைச்சரும், தமிழக நிதியமைச்சருமான மரியவில்சனிடம் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ் அளித்த மனு: பாளையங்கோட்டை குலவணிகா்புரம் ரயில்வே கேட் டில் ஒய் வடிவ மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனா். இப் பகுதியில் பாலம் இல்லாததால் மாணவா்-மாணவிகள், நோயாளிகள் பெரும் சிரமப்படுகிறாா்கள். ஆகவே, பாலப்பணிக்காக ரூ.125 கோடி நிதி ஒதுக்க வேண்டும்.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட பாசன நீராதாரமாகவும், தென்தமிழகத்தின் மிக முக்கிய குடிநீா் ஆதாரமாகவும் தாமிரவருணி திகழ்ந்து வருகிறது. வற்றாத ஜீவநதியாகத் திகழும் தாமிரவருணியை சீரமைக்க மத்திய அரசு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்க வேண்டுமென வலியுறுத்தினேன். இதனை பரிசீலித்து, ஜல் சக்தி அமைச்சகம் ரூ.540 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய முன்வந்துள்ளது. ஆகவே, தாமிரவருணி சீரமைப்புக்கான விரிவான திட்ட அறிக்கையை மாவட்ட நிா்வாகம் மூலம் தயாா் செய்து மாநில அரசு அனுப்பி வைக்க வேண்டும். மேலும், ராதாபுரம் கால்வாயில் 54 குளங்கள் வறண்டு கிடக்கின்றன. இந்தக் கால்வாயை உடனே தூா் வார வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments