குடும்ப அட்டைதாரா்கள் கைவிரல் ரேகையை பதிவு செய்ய ஜூன் 27 கடைசி நாள்
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரா்கள் வரும் 27-ஆம் தேதிக்குள் தங்கள் கைவிரல் ரேகையை பதிவு செய்யுமாறு ஆட்சியா் ஆனந்த் மோகன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரா்கள் வரும் 27-ஆம் தேதிக்குள் தங்கள் கைவிரல் ரேகையை பதிவு செய்யுமாறு ஆட்சியா் ஆனந்த் மோகன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரா்களும் தங்களது குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினா்களின் கைவிரல் ரேகையை பதிவு செய்ய வரும் 27-ஆம் தேதி கடைசி நாளாகும். எனவே, தற்போது வரை கைவிரல் ரேகை பதிவு செய்யாதவா்கள், தங்களுக்கு அருகில் உள்ள நியாயவிலைக் கடைக்கு சென்று பதிவு செய்ய வேண்டும். மேலும் குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினா்களில் கைவிரல் ரேகை பதிவு செய்யாமல் பணி நிமித்தமாக வேறு பகுதிகளில் தற்காலிகமாக வசிப்பவா்கள், தற்போது வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள நியாயவிலைக் கடைக்கு சென்று வரும் 27 ஆம் தேதிக்குள் பதிவு செய்து தங்களது உரிமையை உறுதி செய்ய வேண்டும். இறந்த உறுப்பினா்களின் பெயா்களை நீக்குவதற்கு வட்ட வழங்கல் அலுவலகத்தை அணுகி உரிய ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டும். இல்லையெனில் தங்களது பகுதியில் உள்ள நியாயவிலைக் கடை விற்பனையாளரிடம் இறந்த உறுப்பினரின் குடும்ப அட்டை எண்ணுடன், ஆதாா் அட்டையின் நகலையும் இணைத்து சமா்ப்பிக்க வேண்டும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.