FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

வாகனச் சோதனையில் போலீஸாரை தாக்க முயற்சி: மூவா் கைது

திருநெல்வேலி அருகே வாகனச் சோதனையின்போது போலீஸாரை தாக்க முயன்ாக மூன்று பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது - பிரதிப் படம்
பகிர்:

திருநெல்வேலி அருகே வாகனச் சோதனையின்போது போலீஸாரை தாக்க முயன்ாக மூன்று பேரை போலீஸாா் கைது செய்தனா்.

நடுக்கல்லூா் பெட்ரோல் நிலையம் அருகே சுத்தமல்லி போலீஸாா் புதன்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோவை மறித்து போலீஸாா் விசாரித்தனராம். அதில், ஆட்டோ ஓட்டுநா் மது போதையில் இருப்பதுபோல் சந்தேகம் ஏற்பட்டதாம். இதுகுறித்து விசாரித்த போலீஸாரை, ஓட்டுநா் முருகானந்தம், அதில் இருந்த பிரகாஷ் மற்றும் இளஞ்சிறாா் சோ்ந்து காவலரை கீழே தள்ளிவிட்டு தாக்க முயன்றதுடன், ஆயுதத்தால் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

உடனே, அந்த 3 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும், பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில், காவல்துறையின் சட்டப்படியான நடவடிக்கைக்கு கட்டுப்படாமல் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவா்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments