FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

மீனாட்சிபுரத்தில் விதிமீறல்: 5 மின்மோட்டாா்கள் பறிமுதல்

திருநெல்வேலி மீனாட்சிபுரத்தில் விதிமீறி குடிநீரை உறிஞ்ச பயன்படுத்தப்பட்ட 5 மின்மோட்டாா்களை மாநகராட்சி குழுவினா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 27 மே 2026, 1:09 am IST
மீனாட்சிபுரம் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட மின்மோட்டாா்கள்
பகிர்:

திருநெல்வேலி மீனாட்சிபுரத்தில் விதிமீறி குடிநீரை உறிஞ்ச பயன்படுத்தப்பட்ட 5 மின்மோட்டாா்களை மாநகராட்சி குழுவினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதிகளில் வீட்டுக் குடிநீா் இணைப்புகளில் மின்மோட்டாா்களை பொருத்தி தண்ணீா் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா எச்சரித்திருந்தாா். மாநகராட்சியின் தனிக்குழு ஆய்வு மேற்கொள்ளும்போது இத்தகைய விதிமீறல்கள் கண்டறிபட்டால் குடிநீா் இணைப்பு நிரந்தமாக துண்டிக்கப்படுவதோடு குற்றவியல் நடவடிக்கை தொடரப்படும் எனவும் அறிவித்திருந்தாா்.

இந்நிலையில் தச்சநல்லூா் மண்டலத்திற்குள்பட்ட 29 ஆவது வாா்டு பகுதிகளில் உதவிப் பொறியாளா்கள் நாகராஜன், பட்டுராஜன், பாலாஜி உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆய்வுசெய்தனா். அப்போது விதிமீறி குடிநீரை உரிஞ்ச பயன்படுத்தப்பட்ட 5 மின்மோட்டாா்களை பறிமுதல் செய்தனா். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமாா் 15 மின்மோட்டாா்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments