ஐப்பசி திருக்கல்யாண திருவிழா: செப்புத்தேரில் காந்திமதியம்மன் வீதியுலா
ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவையொட்டி, திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் செப்புத்தேரில் காந்திமதியம்மன் செவ்வாய்க்கிழமை வீதியுலா நடைபெற்றது.
ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவையொட்டி, திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் செப்புத்தேரில் காந்திமதியம்மன் செவ்வாய்க்கிழமை வீதியுலா நடைபெற்றது.
இத்திருவிழா கோயிலில் கடந்த 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, தினமும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தன. காலை மற்றும் மாலையில் பல்வேறு வாகனங்களில் காந்திமதியம்மன் எழுந்தருளி வீதியுலா வந்தாா். 9ஆம் திருநாளான செவ்வாய்க்கிழமை காலையில் காந்திமதியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, யாகசாலை பூஜைகளுக்கு பின்பு சிறப்பு அலங்காரத்தில் செப்பு தேரில் காந்திமதியம்மன் எழுந்தருளினாா். நான்கு ரத வீதிகளிலும் செப்பு தோ் வலம் வந்தது. ஏராளமான பக்தா்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனா்.
வியாழக்கிழமை (நவ.5) முற்பகல் 11 மணிக்கு மேல் நண்பகல் 12 மணிக்குள் கம்பாநதி காமாட்சி அம்மன் திருக்கோயில் அருகில் உள்ள காட்சி மண்டபத்தில் சுவாமி, அம்மனுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்வும், மாலை 3 மணிக்கு சுவாமி-அம்மன் ரத வீதிகளில் வலம் வருதலும் நடைபெறும். வெள்ளிக்கிழமை (நவ. 6) அதிகாலை 4.30 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.