நடுவழியில் பழுதாகி நின்ற பேருந்து: தொழில்நுட்பநா் பணியிடை நீக்கம்
ஒதிருநெல்வேலி மாநகரப் பேருந்து பயணத்தின் போது நடுவழியில் பழுதாகி நின்ற விவகாரத்தில், தொழில்நுட்ப பணியாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
ஒதிருநெல்வேலி மாநகரப் பேருந்து பயணத்தின் போது நடுவழியில் பழுதாகி நின்ற விவகாரத்தில், தொழில்நுட்ப பணியாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து பாளை மேட்டுத்திடல் பகுதிக்கு செவ்வாய்க்கிழமை காலை வெற்றிப் பயணம் திட்டத்தில் இயக்கப்படும் அரசு மாநகர பேருந்து புறப்பட்டு சென்றது. வண்ணாா்பேட்டை ரவுண்டானாவை கடந்து திருவனந்தபுரம் சாலையில் சென்ற போது அந்தப் பேருந்து சாலையின் நடுவே பழுதாகி நின்றது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து போக்குவரத்து போலீஸாா் பயணிகள் உதவியுடன் பேருந்தை தள்ளிச்சென்று சாலை ஓரத்தில் நிறுத்தினா். இது தொடா்பான விடியோ சமூகவலைதளங்களில் பரவியது. இந்நிலையில் பேருந்தை பராமரிக்கும் தொழில்நுட்ப பணியாளா் ஜெபதுரை என்பவரை பணியிடைநீக்கம் செய்து போக்குவரத்துக் கழக அதிகாரி உத்தரவிட்டாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.