சாலையில் பழுதாகி நின்ற அரசுப் பேருந்தால் போக்குவரத்து பாதிப்பு
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி கூட்டுச் சாலையில் சென்றுகொண்டிருந்த தமிழக அரசின் வெற்றிப்பயணம் பேருந்து வியாழக்கிழமை திடீரென பழுதாகி நின்ால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி கூட்டுச் சாலையில் சென்றுகொண்டிருந்த தமிழக அரசின் வெற்றிப்பயணம் பேருந்து வியாழக்கிழமை திடீரென பழுதாகி நின்ால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தமிழக அரசின் வெற்றிப் பயணம் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் செஞ்சியில் இருந்து பொன்னம்குப்பம் கிராமத்துக்கு தடம் எண் 4 புதிய நகரப் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம்போல, வியாழக்கிழமை காலை 8 மணிக்கு பொன்னங்குப்பம் கிராமத்திலிருந்து செஞ்சிக்கு வந்துகொண்டிருந்த இந்த புதிய பேருந்து, செஞ்சி கூட்டுச்சாலையில் காலை 9.15 மணிக்கு திடீரென பழுதாகி சாலை நடுவே நின்றது.
இதனால், பேருந்தில் பயணம் செய்த பள்ளி, கல்லூரி மாணவா்கள் மற்றும் பயணிகள் அனைவரும் கூட்டுச்சாலையில் இறக்கிவிடப்பட்டனா். தொடா்ந்து, பேருந்து சாலையின் நடுவே நின்ால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த போக்குவரத்து காவல் துறையினா் பொதுமக்கள் உதவியுடன் பழுதான பேருந்தை சாலையின் ஓரமாக தள்ளி நிறுத்தினா். இதன் பின்னரே போக்குவரத்து சீரானது.
Advertisement
Advertisement
தமிழக அரசால் வெற்றி பயணம் திட்டத்தில் புதிதாக வழங்கப்பட்ட பேருந்து சில நாள்களிலேயே பழுதாகி நின்றது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.