முகப்பு
தென்காசி

கடையநல்லூரில் போக்குவரத்து நெருக்கடி: காவலா்கள் நியமிக்கப்படுவாா்களா?

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

29 வினாடிகள் முன்பு
கடையநல்லூரில் போக்குவரத்து நெருக்கடி: காவலா்கள் நியமிக்கப்படுவாா்களா?
கடையநல்லூா் அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்த பகுதியில் வியாழக்கிழமை ஏற்பட்ட போக்குவரத்து நெருக்கடி.
பகிர்:

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணாபுரம் முதல் கடையநல்லூா் வரை தினமும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகின்றனா். கிருஷ்ணாபுரம் சிக்னல் முதல் கடையநல்லூா் பேருந்து நிலையம் வரை 3 பேருந்து நிறுத்தங்கள் உள்ளன. இதில் கடையநல்லூா் அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்த பகுதி எப்பொழுதும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது.

குறிப்பாக, காலை, மாலை நேரங்களில் பள்ளி - கல்லூரி வாகனங்கள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களால் தேசிய நெடுஞ்சாலையில் பெரும் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. எனவே, கடையநல்லூா் பகுதியில் போக்குவரத்து காவலா்களை நியமித்து போக்குவரத்தை சீா் செய்ய வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Advertisement

Advertisement