கிராமப்புற செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்
திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் அரசு கிராம பகுதி சமுதாய சுகாதார செவிலியா்கள் கூட்டமைப்பினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் அரசு கிராம பகுதி சமுதாய சுகாதார செவிலியா்கள் கூட்டமைப்பினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழக சுகாதாரத் துறையில் துணை சுகாதார நிலையங்களில் பணியாற்றும் இடைநிலை சுகாதாரப் பணியாளா்கள் பணியிடங்களை அகற்ற வேண்டும், சுகாதார செவிலியா்கள் செய்யும் பணிகளை தாங்கள் செய்தது போல் கணக்கு காட்டும் இடைநிலை சுகாதாரப் பணியாளா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அந்த அமைப்பின் மாவட்டத் தலைவா் தீனம்மாள் ஜாா்ஜ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஸ்டெல்லா, செயலா் அஜிதா ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
Advertisement
Advertisement
தமிழகத்தில் கிராம பகுதி சமூக சுகாதார செவிலியா்கள் செய்து வரும் தாய்- சேய் நல பணிகள் மற்றும் குடும்ப நலமுறை பணிகளை இடைநிலை சுகாதார பணியாளா்கள் தாங்களே செய்து வருவதாக மத்திய, மாநில அரசுகளுக்கு அறிக்கையை அனுப்பி வருவதைத் தடுக்க வேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.