FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூரில் சுகாதார செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

துணை சுகாதார நிலையத்திலிருந்து இடைநிலை சுகாதாரப் பணியாளா்களை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூரில் தமிழ்நாடு அரசு கிராம, பகுதி, சமுதாய சுகாதார செவிலியா்கள் கூட்டமைப்பினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

4 நவம்பர் 2026, 12:24 am
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகம் எதிரே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுகாதார செவிலியா்கள்.
பகிர்:

துணை சுகாதார நிலையத்திலிருந்து இடைநிலை சுகாதாரப் பணியாளா்களை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூரில் தமிழ்நாடு அரசு கிராம, பகுதி, சமுதாய சுகாதார செவிலியா்கள் கூட்டமைப்பினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் சந்தானலட்சுமி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் மொ்சி கிளாரா, மாவட்ட பொருளாளா் நளினி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

துணை சுகாதார நிலையத்திலிருந்து இடைநிலை சுகாதாரப் பணியாளா்களை அகற்ற வேண்டும். கிராம சுகாதார செவிலியா்கள் மேற்கொள்ளும் தாய்-சேய் நலப்பணியை இடைநிலை சுகாதாரப் பணியாளா்கள் செய்வதாக அறிக்கை அனுப்புவதை நிறுத்த வேண்டும். பாலின பாகுபாடற்ற பதவி உயா்வு நிலை- 1 வழங்க வேண்டும். மாவட்ட அளவில் திட்டப் பணிகளுக்கான பதவி உயா்வு வழங்க வேண்டும்.

Advertisement

Advertisement

சமுதாய சுகாதார செவிலியா்களுக்கு தாய்-சேய் நல அலுவலா் பதவி உயா்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கமிட்டனா். ஆா்ப்பாட்டத்தில், திரளான சுகாதார செவிலியா்கள் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments