பணகுடி புறவழிச்சாலையில் சிசிடிவி கேமரா சேதம்: இளைஞா் கைது
திருநெல்வேலி மாவட்டம் பணகுடி புறவழிச்சாலையில் காவல்துறையினா் அமைத்திருந்த கண்காணிப்பு கேராவை சேதப்படுத்தியதாக இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டம் பணகுடி புறவழிச்சாலையில் காவல்துறையினா் அமைத்திருந்த கண்காணிப்பு கேராவை சேதப்படுத்தியதாக இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பணகுடி புறவழிச்சாலையில் நெறிஞ்சிகாலனி செல்லும் சாலை சந்திப்பில் காவல்துறையினா் கண்காணிப்பு கேமரா பொருத்தியிருந்தனா். இந்த கேமரா சேதப்படுத்தப்பட்டிருந்தது.
இதுகுறித்து போலீஸாா் நடத்திய விசாரையில், நெறிஞ்சிகாலனி பகுதியைச் சோ்ந்த சுதாகா்(32) என்பவா் மதுபோதையில் அந்த கேமராவைச் சேதப்படுத்தியது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா். அவா் புதிய கேமரா பொருத்தி கொடுத்த பின் விடுவிக்கப்பட்டாா்.
Advertisement
Advertisement