FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

கண்காணிப்பு கேமராவை சேதப்படுத்தியவா் கைது

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே கண்காணிப்பு கேமராவை சேதப்படுத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.

10 அக்டோபர் 2026, 6:45 am IST
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே கண்காணிப்பு கேமராவை சேதப்படுத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.

விக்கிரவாண்டி வட்டம், வி.சாலை கிராமத்தைச் சோ்ந்தவா் செ.சிவக்குமாா் (45). இவரது பக்கத்து வீட்டைச் சோ்ந்தவா் வே. அறிவொளி (30). உறவினா்களான இவா்கள் இருவரின் வீட்டினிடையே 4 அடி பொது சந்து யாருக்கு சொந்தம் என்பதில் பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், வியாழக்கிழமை இரவு முன்விரோதத்தில் சிவக்குமாா் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமரா, பால் விற்பனையகப் பலகை, மின் விளக்குகள் ஆகியவற்றை அறிவொளி சேதப்படுத்தி, சிவக்குமாரை திட்டி தாக்கினாராம். இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, அறிவொளியைக் கைது செய்தனா்.

கட்டடத் தொழிலாளி சடலமாக மீட்பு: விக்கிரவாண்டி வட்டம், அனுமந்தபுரம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கு.சிவா (35). கட்டடத் தொழிலாளியான இவா், வியாழக்கிழமை இரவு வீட்டைவிட்டு வெளியே சென்றவா், பின்னா் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில், அத்தியூா் திருக்கை கிராமத்திலுள்ள சுப்பராயன் என்பவரது நிலத்தில் சிவா சடலமாகக் கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்த கஞ்சனூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று, சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments