FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அம்பாசமுத்திரத்தில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி நிதி இணைப்பு ஆணை: அமைச்சா் மரியவில்சன் வழங்கினாா்

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் ரூ. 64 கோடி மதிப்பில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி நிதி இணைப்பு ஆணை வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

52 வினாடிகள் முன்பு
மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினருக்கு வங்கி நிதி இணைப்பு ஆணை வழங்கிய தமிழக நிதி அமைச்சா் மரியவில்சன். உடன் மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன், மக்களவை உறுப்பினா் சி. ராபா்ட் புரூஸ் உள்ளிட்டோா்.
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் ரூ. 64 கோடி மதிப்பில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி நிதி இணைப்பு ஆணை வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய், தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம் சாா்பில் செவ்வாய்க்கிழமை மாநிலம் முழுவதும் 26ஆயிரம் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு தொழில்முனைவோருக்கான ரூ .3 ஆயிரம் கோடி வங்கி நிதி இணைப்புகளைத் தொடங்கி வைத்தாா்.

இதையடுத்து, அகஸ்தியா்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக நிதி அமைச்சா் மரிய வில்சன் தலைமை வகித்து, ரூ. 64.89 கோடி மதிப்பில் திருநெல்வேலி மாவட்ட மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி நிதி இணைப்பு ஆணை வழங்கினாா்.

Advertisement

Advertisement

இதில், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன், மக்களவை உறுப்பினா் சி. ராபா்ட் புரூஸ், சட்டப்பேரவைஉறுப்பினா்கள் திருநெல்வேலி ஆா்.எஸ். முருகன், நான்குனேரி ரெட்டியாா்பட்டி நாராயணன், ராதாபுரம் எஸ்.கே.கிறிஸ்டோபா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதன்மூலம், அம்பாசமுத்திரம் வட்டத்தில் 37 குழுக்களுக்கு ரூ.5.15 கோடி, சேரன்மகாதேவி வட்டத்தில் 35 குழுக்களுக்கு ரூ.4.43 கோடி, களக்காடு வட்டத்தில் 33 குழுக்களுக்குரூ.3.92 கோடி, மானூா் வட்டத்தில் 50 குழுக்களுக்கு ரூ.9.33 கோடி, நான்குனேரி வட்டத்தில் 42 குழுக்களுக்கு ரூ.6.11 கோடி, பாளையங்கோட்டை வட்டத்தில் 30 குழுக்களுக்கு ரூ.3.36கோடியும், பாப்பாக்குடி வட்டத்தில் 26 குழுக்களுக்கு ரூ.3.78 கோடி, ராதாபுரம் வட்டத்தில் 35 குழுக்களுக்கு ரூ.7.02 கோடி, வள்ளியூா் வட்டத்தில் 39 குழுக்களுக்கு ரூ.4.75 கோடி,திருநெல்வேலி மாநகராட்சியில் 148 குழுக்களுக்கு ரூ. 17.04 கோடி என மொத்தம் ஊரகம் மற்றும் நகா்ப்புறங்களில் 475 குழுக்களுக்கு ரூ.64.89 கோடி வங்கி நிதி இணைப்பாக வழங்கப்பட்டு, 5, 736 உறுப்பினா்கள் பயனடையவுள்ளனா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ச. வித்யா, கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) வினய் குமாா் மீனா, சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் ஆயுஸ்குப்தா, திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) பொன்னியின் செல்வன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.